அய்யகோ.. இனி சாதி மறுப்பு திருமணம் செய்ய முடியாதே., திருமாவளவன் குமுறல்.!
thiruma say about marriage age 21
பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த கொண்டுவரப்பட்ட மசோதாவை எதிர்ப்பதற்கு, ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவித்தாவது, "பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கு திருமணம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
அப்படி 20 வயதுக்கு குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படும் நிலை உருவாகும்.
பெரும்பாலும் சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம் நடக்கின்ற போது, இந்த வயது வரம்பை ஒரு காரணமாக காட்டி, அவர்கள் மீதுதான் போக்சோ சட்டம் அதிகமாக ஏவப்படுகிறது.
எனவே, சாதி மறுப்பு மத மறுப்பு திருமணங்களை எதிர்க்கக் கூடியவர்கள் இதனை வரவேற்கிறார்கள். இந்த சட்டம் அந்த அடிப்படையில்தான் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது" என்று திருமாவளவன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
(சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் காதலித்து தான் 100 சதவிகிதம் நடைபெறுவதால்.. இது காதலர்களுக்கு சிக்கல் என்று திருமாவளவன் சொல்லாமல் சொல்கிறார் போல...)
English Summary
thiruma say about marriage age 21