அனைத்து ஜனநாயக சக்திகளும் ராகுல்காந்திக்கு துணை நிற்க வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்.!
Thirumavalavan in Bharat jodo yatra
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் இன்று டெல்லியை அடைந்துள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, துரை ரவிக்குமார் எம்பி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தொல்.திருமாவளவன், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற சனாதன சக்திகளை எதிர்த்து இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளமை தலைமுறையினர் இடையே ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்து என்றும் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது தான் ராகுல் காந்தியில் ஒற்றுமை பயணத்தின் நோக்கம் என தெரிவித்தார். அனைத்து ஜனநாயக சக்திகளும் ராகுல்காந்திக்கு துணை நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Thirumavalavan in Bharat jodo yatra