பாஜகவில் யாருமே இருக்க மாட்டாங்க.!! அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தால் இந்து சமய அறநிலைத்துறை இருக்காது, கோவிலுக்கு முன் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் சிலை இருக்காது, கடவுள் நம்புபவன் முட்டாள் என சொல்லியவரின் சிலை அகற்றப்படும். அவர்களுக்கு பதிலாக ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழ் புலவர்கள், திருவள்ளுவர் சிலை வைக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி தேசம் காப்போம் என்ற மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ளது.

இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிக்காக விமானம் மூலம் திருச்சி சென்ற திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "டிசம்பர் 23ஆம் தேதி ஜனநாயகம் வெல்லும் மாநாடு ஒருங்கிணைத்த உள்ளோம். 

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துகிறது.

அவர்களால் கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா? எனவே மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கும். பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியது மணலை கயிறாக திரிப்போம், வானத்தை வில்லாக வளைப்போம் என்று சொல்லும் கூற்றை போல உள்ளது. பரபரப்புக்காக அவர் பேசும் பேச்சு தமிழ்நாட்டில் எடுபடாது. நாடாளுமன்ற தேர்தல் வரை இவரது பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும். அதன் பிறகு அந்த கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan response to Annamalai statement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->