அது உண்மை என்றால், எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ அமைப்புகளை தடை செய்யவேண்டும் - திருமாவளவன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் உண்மை முகத்தை மக்கள் அறிந்து கொண்டு, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்ததாவது, "சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உறுதியானால் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளை மத்திய அரசு தடை செய்து கொள்ளட்டும். 

மிதவாத இந்துக்கள், அடிப்படைவாத இந்துக்கள் என்று எதுவும் கிடையாது. அப்பாவி இந்துக்கள் ஆர்எஸ்எஸ் இந்துக்கள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம்.

பெரும்பான்மை அடிப்படை வாத அதிகாரத்தின் அடிப்படையில், அரசியல் அதிகாரத்தை வென்றுவிட முடியும் என்று பாஜகவினர் கருதுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த இந்துக்களும் அப்படி இருப்பதில்லை. 

ஒருவேளை சர்வதேச அமைப்புகளோடு எஸ் டி பி ஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கும் பட்சத்தில், மத்திய அரசு அந்த அமைப்புகளை தடை செய்து கொள்ளட்டும்.

தமிழகத்தை குறி வைத்துள்ள சனாதன பயங்கரவாதத்தை நாம் முறியடிக்க வேண்டும். சமய, சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வருகின்ற மாதம் இரண்டாம் தேதி சமூக நல்லிணக்கண நல்லிணக்க பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில் சனாதன சக்திகளுக்கு எதிரானவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan say about BJP RSS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->