நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது - திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பு!
thirumavalavan VCK Award Sathyaraj periyar
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
2022-ம் ஆண்டு முதல் கூடுதலாக 'மார்க்ஸ் மாமணி" விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி சித்தா ராமையா, கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததிராய், து.ராஜா, குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காசி ஆனந்தன், ஆ.சக்தி தாசன், வை.பாலசுந்தரம், காதர்மொய் தீன், ஜவாஹி ருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இது வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவரிசையில் 2025-ம் ஆண்டுக்கான வி.சி.க. விருதுகள் பெறும் சான்றோர் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டுக்கான 'அம்பேத்கர் சுடர்' விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கே.எஸ்.சலம், பெரியார் ஒளி விருதினை திரைப்படக் கலைஞர் சத்யராஜ்க்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:-
அம்பேத்கர் சுடர்-கே.எஸ்.சலம், பெரியார் ஒளி-சத்யராஜ், திரைப்படக் கலைஞர். மார்க்ஸ் மாமணி-தியாகு பொதுச் செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், காமராசர் கதிர்-வெ.வைத்தி லிங்கம் முன்னாள் முதல்-அமைச்சர், புதுச்சேரி.
அயோத்திதாசர் ஆதவன்-பா.ஜம்புலிங்கம், காயிதே மில்லத் பிறை-பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவி, செம்மொழி ஞாயிறு-அ.சண்முகதாஸ்
English Summary
thirumavalavan VCK Award Sathyaraj periyar