'ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்ட விவகாரம் - அனுமதி மறுத்த தமிழக அரசு - அதிர்ச்சியில் பெரியாரிஸ்ட்ஸ்.!  - Seithipunal
Seithipunal


இன்று (16-10-2022) விழுப்புரத்தில் 'ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டமியற்றும் கோரிக்கை மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த மாநாட்டிற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பில் கடவுள் இல்லை என்ற சிந்தனை உள்ளவர்கள், பெண்ணுரிமை, சமூகநீதி உள்ளிட்ட கருத்துக்களை கொண்ட பல அமைப்புகள் உள்ளன.

இந்நிலையில், விழுப்புரத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு 'ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டமியற்றும் கோரிக்கை மாநாட்டிற்கு காவல்துறைக்கு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெரியார் வழியில் வந்தவர்கள், பெரியார் மண் என்று மார்த்தட்டி கொள்ள கூடியவர்களாக இருக்கும் ஆளும் திமுக அரசாங்கமே, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்கு அனுமதி மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த கூட்டமைப்பில் உள்ள மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. அனுமதி தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியோடு மாற்றுத்தேதியில் மாநாடு  நடத்தப்படும்" என்று தகவல் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumurugan gandhi aanavapadukolai meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->