இந்த தேர்தலின் வெற்றிதான்., முதலமைச்சர் ஸ்டாலினின் அரசுக்கு அளிக்கும் அங்கீகாரம் - காங்கிரஸ் எம்.பி.! - Seithipunal
Seithipunal


இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வெற்றிதான்., முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரம் ஆகும் என்று, காங்கிரஸ் கட்சி எம்பி திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள வார்டுகளில் போட்டியிடும் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திருநாவுக்கரசு தெரிவிக்கையில்,

"நாட்டில் உள்ள முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற சிறப்பினை அவர் பெற்றுள்ளார்.

முதலமைச்சரின் இந்த மக்கள் சேவைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

எதிர்கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் அவர்கள் வெளிநடப்பு, கூச்சல்-குழப்பம் போன்றவை தான் நடக்கும். அவர்களால் எந்த ஒரு காரியமும் நடக்காது.

உங்களுக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகாலம் ஆட்சி மீதம் உள்ளது/ இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பழிவாங்கும் செயல்களை மத்தியில் ஆளும் பாஜக செய்து கொண்டிருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல், இவை அனைத்துக்கும் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்று திருநாவுக்கரசர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirunavukarasu election campaign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->