டாஸ்மாக் விவகாரம்: விசிக, பாஜகவினர் மீது பாய்ந்த வழக்கு!
Thirupathur VCK BJP TASMAC Police case
திருப்பத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்தூரில் மது கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் பாஜகவை சேர்ந்த 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு எதிரே ஒரு புதிய தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று திறக்கப்பட்டது.
இந்த மதுக்கடைக்கு அந்த பகுதி மக்களும், பெண்களும், மாணவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும், விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பாஜகவினர் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இரு கட்சிகளை சேர்ந்த 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
English Summary
Thirupathur VCK BJP TASMAC Police case