சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ்; குண்டர் சட்டத்தில் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட சிலர் கைது..!
Divya Kallachi made pornographic reels using children have been arrested under the Goondas Act
யூடியூபர்களான சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளனர். 54 வயதுடைய சித்ரா,கடலுாரைச் சேர்ந்தவர் இவர் மக்கள் பார்வை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா 30, திவ்ய கள்ளச்சி என்ற யுடியூப் சேனலையும், ஈரோட்டைச் சேர்ந்த கீழக்கரை கார்த்திக் 30, என்பவர் கீழக்கரை கார்த்திக் என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மூவரும் சேர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்துள்ளதாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சித்ரா புகார் அளித்திருந்தார்.அத்துடன், தன்னுடைய வங்கி கணக்கை ஹேக் செய்து ரூ.2.5 லட்சத்தை திவ்யா எடுத்துள்ளதாக சித்ரா குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, அவ்வாறு ரீலிஸ் எடுத்து பாதிக்கப்பட்ட 02 சிறுவர்களிடம் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி விசாரணை நடத்தினார். அதில் யுடியூபர்கள் திவ்யா மற்றும் கீழக்கரை கார்த்திக் ஆகியோர் சில மாதங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்துாரில் வைத்து சிறுவர்களை பயன்படுத்தி ஆபாச ரீல்ஸ் எடுத்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி புகாரில், திவ்யா, கீழக்கரை கார்த்திக் ஆகியோரிடம் ஏ.டி. எஸ். பி. சூரியமூர்த்தி, டி.எஸ்.பி. ராஜா, மகளிர் இன்ஸ்பெக்டர் மலையரசி விசாரித்தனர். விசாரணையில் போது, சித்ரா சொல்லி தான் வீடியோ எடுத்ததாக கார்த்திக் கூறியுள்ளார்.

இதனால், இவர்கள் மீது போக்சோ உள்பட 04 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைப்பதொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Divya Kallachi made pornographic reels using children have been arrested under the Goondas Act