திருவண்ணாமலை மகா தீபம்: மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மகா தீபத்தை முன்னிட்டு இந்த முறை பக்தர்களுக்கு மலை மீது ஏற அனுமதி இல்லை என்று, அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 

அதிகப்படியானவரை மலை மீது ஏற்றக் கூடாது என்ற அறிவுறுத்தலின்படி, பரணி தீபத்திற்கு 300 பேருக்கு அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

வரும் 13ஆம் தேதி, திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக 4500 கிலோ நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்ட காரணத்தினால் தான் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஃபெஞ்ச்ல் புயலின் போது திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 

தற்போது வரை மண் ஈரப்பதத்தில் இருப்பதால் பாதுகாப்பு கருதி இந்த முறை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai Maha Deepam Minister Sekarbabu announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->