''திமுகவின் பொய்ப் பித்தலாட்ட போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல'' ; அண்ணாமலை..! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுதும் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தமிழக பா.ஜ., தொடங்கியுள்ளது. இந்த இக்கையெழுத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ''தி.மு.க.,வின் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960-கள் அல்ல,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அத்துடன் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மக்களிடம் ஆதரவு காணப்படுவதாக பாஜகவின் கூறியுள்ளனர்.

இது குறித்து, அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது; 'தி.மு.க.,வின் அறுபதாண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர். 

ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கண்களைத் திறந்து பாருங்கள் முதல்வரே. உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல. அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது.' என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is not the 1960s to be fooled by the DMKs fake drama Annamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->