நேற்று இரவு வெளியான அறிவிப்பு.. இது தமிழகம் தானா? கொந்தளிப்பில் தமிழர்கள்.!
Tirukkuraḷ TNPSC
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் பாடத்திட்டத்திலிருந்து உலகமே போற்றக்கூடிய., உலகப் பொதுமறையாம் திருக்குறள் நீக்கப்பட்டு இருப்பது, தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில், குரூப்-4, குரூப்-2, குரூப்-1 உள்ளிட்ட தேர்வுகளில் என்னென்ன பாடத்திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமில்லாமல் இந்த தேர்வுகளுக்கான மாதிரி கேள்விகளும் அதில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த பாடத்திட்ட பகுதியிலிருந்து திருக்குறள் முழுவதுமாக நீக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வின்போது திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, நேற்று வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் முழுமையாக புறக்கணிக்கப்படடிருப்பது தமிழார்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தமிழகம் தான...? என்று கொந்தளிப்பில் தமிழர்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.