'லால் டா’ மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் மம்தா! சோகத்தில் மூழ்கிய திரிணமூல் காங்கிரஸ்!
TMC MLA Lal Da DeaTH
மேற்கு வாங்க மாநிலம், கலிகஞ்ச் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமது, நேற்று அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார்.
முந்தையநாள் இரவு பலாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வழக்கறிஞரான அகமது, 2011 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கலிகஞ்ச் தொகுதியில் இருந்து தொடர்ந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பகுதியில் அவர் ‘லால் டா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
அவரது மறைவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அகமதுவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.