ஜனவரி 11 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடக்கும்!
TN Assembly 2024
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனவரி 8, 9, மற்றும் 10 தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம்:
2025 ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. புதிய ஆண்டின் தொடக்க கூட்டம் என்பதால் வழக்கமாக ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, உரையை நிகழ்த்தாமல் ஆளுநர் திடீரென மண்டபத்தை விட்டு வெளியேறினார். ஆளுநர் வெளியேறியதற்கான காரணமாக, தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்படாதது குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர், ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார். தொடர்ந்து பேரவையில் மன்மோகன் சிங் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கான இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.