முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானம்! அதிமுக ஆதரவு! பாஜக எதிர்ப்பு, வெளிநடப்பு! - Seithipunal
Seithipunal



யுஜிசி வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறி உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று யுஜிசி வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் வரவேற்று முழு ஆதரவை கொடுத்தன. 

அதே சமயத்தில் யுஜிசி வரைவு விதிமுறைகளுக்கு எதிரான தனித்தீர்மானம் என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள்  சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், யுஜிசி புதிய வரைவு தொடர்பான முதலமைச்சரின் தீர்மானத்தை பா.ஜ.க எதிர்க்கிறது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பின்னர், யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிரான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn Assembly bjp nainar nagendran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->