தமிழக மீனவர்களுக்கு நாங்க இருக்கோம்! பிரதமர் இலங்கை பயணம் குறித்து சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அதிருப்தி!
TN Assembly CM mk stalin PM Modi
தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கைகள் குறித்து நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு, 110 விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர்களின் நலனைப் பற்றி உரையாற்றினார்.
"இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என முதல்வர் தெரிவித்தார்.
மேலும், "இலங்கை சென்ற பிரதமர் இந்த பிரச்சனையை சுட்டிக் காட்டியும், அதற்கான தீர்வுகளை வலியுறுத்தியும் பேச வேண்டும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், 97 மீனவர்களும் அவர்களது படகுகளும் இன்னும் திரும்ப வராத நிலை வருத்தமளிக்கிறது. இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உண்மையான நியாயம் கிடைக்காததை காட்டுகிறது" என்றார்.
"மத்திய அரசிடம் தொடர்ந்து மனு வைத்து, அழுத்தம் கொடுத்தாலும், கைது மற்றும் படகு பறிமுதல் நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மத்திய அரசு எப்படியிருந்தாலும், நம் மீனவர்களின் உரிமைக்காக எப்போதும் அவர்கள் பக்கமாக நின்றுக்கொண்டே இருப்போம்" என உறுதியுடன் தெரிவித்தார்.
English Summary
TN Assembly CM mk stalin PM Modi