சட்டமன்றத்தை கதிகலங்க வைத்த எடப்பாடி பழனிச்சாமி! நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என்ற ஸ்டாலின்!
TN Assembly DMK MK Stalin ADMK EPS
இன்று கூடியுள்ள தமிழக சட்டப்பேரவையில் அரிட்டப்பாட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தனித் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "நீங்கள் கடிதம் எழுதியதாகக் கூறுகிறார்கள். ஆனால், மத்திய அரசு தரப்பில் கடிதம் வரவில்லை என்று கூறுகிறார்களே.
அப்படியே அரசு கடிதம் எழுதியது என்றால் அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பது எதிர்க்கட்சிக்கு தெரிய வேண்டாமா?
இது முக்கியமான பிரச்சனை. மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனை. இதுகுறித்த தனித் தீர்மானம் வரும்போது கடித பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நீங்கள் எதிர்க்கட்சிக்கும் மக்களுக்கும் தெரிவித்திருக்க வேண்டுமல்லவா?
உங்கள் தனித் தீர்மானத்திற்கு எந்த கேள்வியும் கேட்காமல் எதிர்க்கட்சி "ஆமாம்" போட்டு போகவேண்டும் என்பது என்ன நியாயம்? என்று கேட்டார்.
அப்போது இதற்க்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "நீங்கள் கத்தி பேசுவதால் எதையோ சந்தித்ததாக அர்த்தமாகிவிடாது. டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம். ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை, அனுமதி தரும் நிலை வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்" என்றார்.
English Summary
TN Assembly DMK MK Stalin ADMK EPS