மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!!
TN Assembly Meeting on Apr 6
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே 2022-2023 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து அடுத்தநாள் 19ஆம் தேதி வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, கடந்த 21-ஆம் தேதியில் இருந்து 23-ஆம் தேதிவரை பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
நேற்று பட்ஜெட் விவாதம் மீது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் என்று பதிலுரை அளித்தனர். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும். அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி துறை ரீதியான மானியக்கோரிக்கை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
English Summary
TN Assembly Meeting on Apr 6