ராஜினாமா செய்கிறார் செந்தில்பாலாஜி.. புதிய அமைச்சர்..! வெளியான தகவலை உறுதிசெய்த சட்டப்பேரவை சம்பவம்!
TN Assembly Senthilbalaji Rahupathy DMK Minister
திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படும் நிலையில், உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு விசாரணை இன்றி சிறைத் தண்டனை விதிக்கப் பற்றிய மசோதாவை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக அமைச்சர் ரகுபதி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
நிகழ்ச்சி நிரலில், இந்த மசோதாவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக மோசடி வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
பின்னர் அடுத்த இரு நாளில் செந்தில்பாலாஜியை தியாகி என்று போற்றிய முதல்வர் ஸ்டாலின், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கினார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என்று இரண்டில் ஒன்றை தேர்வு செய்து 28 ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
எனவே, செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இப்படியான நிலைமை இருக்க, இன்று செந்தில்பாலாஜி இந்த மசோதாவை தாக்கல் செய்தால், 29 ஆம் தேதி மசோதா மீது நடக்கும் விவாதத்தில் செந்தில் பாலாஜி பதிலளிக்க முடியாத நிலை உருவாகும்.
எனவே இதனை தவிர்க்க அமைச்சர் ரகுபதி இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. மேலும், செந்தில்பாலாஜி பார்த்துவந்த மின்சாரத்துறை அமைச்சர் பழனிவேல் தியராஜனுக்கும், மதுவிலக்கு துறைக்கு புதிய அமைச்சராக உதயசூரியன் நியமிக்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் ஏற்கனவே நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
English Summary
TN Assembly Senthilbalaji Rahupathy DMK Minister