தரம்கெட்ட சட்டம் ஒழுங்கின் உச்சம்! வட இந்தியர்கள் மீது உங்களுக்கு அப்படி என்ன வன்மம்? தமிழநாடு பாஜக சராமாரி கேள்வி!
TN BJP Condemn to DMK Minister Ma Su and DMK Govt mk stalin
வட இந்தியர்கள் மீது உங்களுக்கு அப்படி என்ன வன்மம் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களே? என்று தமிழநாடு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்த அதன் அறிக்கையில், "உங்கள் திராவிட மாடல் ஆட்சியில், தரம்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கின் உச்சமாக, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு அரசு மருத்துவரை அவரது அறைக்குள் சென்று கத்தியால் குத்தி வன்முறைத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தால் மொத்த தமிழகமுமே அச்சத்தில் உறைந்துள்ளது.
ஆனால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான நீங்களோ, அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய சரியான அடிப்படைத் தகவலை ஆராயாமல், “மருத்துவரைத் தாக்கியது வடமாநிலத்தவர்கள்” என்ற பொய் வதந்தியை அவசரமாக பொதுவெளியில் பரப்பியது ஏன்?
மக்களிடையே இன வன்முறையை தூண்டி, உங்கள் நிர்வாகக் கோளாறுகளை மூடி மறைப்பதற்காகவா?
அவ்வாறு மக்களிடையே பொய் செய்திகளைப் பரப்பிய உங்களுக்கெதிராக மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்த பிறகு, “தாக்குதல் நடத்திய நபர் வடமாநிலத்தவர் இல்லை” என்பதை மட்டும் ஒப்புக்கொள்கிறீர்களே, நமது அண்டை மாநிலத்தில் வாழும் சகோதர உறவுகள் மீது சாட்சியமின்றி அவப்பழி சுமத்தியதற்கு நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை?
கொடுக்கப்பட்ட பதவிக்கான பொறுப்பு சிறிதுமின்றி, இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான பொய் தகவல்களைப் பரப்புவது தான் ஒரு அரசு அமைச்சருக்கான மாண்பா?
“திராவிடம்” என்ற பெயரில், தொடர்ந்து வட மாநிலங்களையும் வட மாநில மக்களையும் அவமதித்து வருகிறீர்களே, உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் இவ்வாறு வடமாநில மக்கள் இழிவுபடுவதை ஆதரிக்கிறதா? என்று தமிழ்நாடு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
TN BJP Condemn to DMK Minister Ma Su and DMK Govt mk stalin