இன்று முதல் “ஸ்டிக்கர் ஸ்டாலின்” என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுவீர் - பாஜக தரப்பில் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை மறைத்து, தங்களின் திட்டம் போல் தமிழக அரசு விளம்பரப்படுத்தவதாக தமிழக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்த பாஜகவின் அறிக்கையில், "பிரதமர் அவர்களால் "பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம்" திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 

தற்போது  தமிழகத்தில் 1200க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் ஜெனரிக் மருந்துகளை குறைந்த விலையில் வழங்கி மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுத்து வருகிறது. 

இந்நிலையில், வழக்கம்போல இதனை பிரதியெடுத்து தற்போது "முதல்வர் மருந்தகம்" என ஸ்டிக்கர் ஒட்டி தங்களின் கனவு திட்டம் போல அறிமுகப்படுத்தி, தற்போது அதற்கான விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரப்படுத்தியுள்ளது முதல்வர் ஸ்டாலின் அரசு. 

ஒருபுறம் நமது பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல் காட்சிப்படுத்தி, பின்புறம் அதன் ஓர் அம்சமான “காலை உணவு” திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 

பின், பிரதமரின் ஜல் ஜீவன் திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா போன்ற பல மக்கள் நலத்திட்டங்களை தங்கள் ஸ்டிக்கரை ஒட்டி தங்கள் திட்டம் போல் மாயை உருவாக்கியது. அந்த வரிசையில் தான் தற்போது மக்கள் மருந்தகம், முதல்வர் மருந்தகமாக புதியதாக உரு மாற்றப்படுகிறது. 

சமீபத்தில், நான் முதல்வன் சமூக வலைதளத்தில், நமது பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட PM Internship திட்டத்தின் பெயரை சிறிய எழுத்துகளில் வெளியிட்டு, மத்திய அரசின் திட்டம் என்பதை மறைத்து திமுகவின் திட்டம் போல் விளம்பரப்படுத்தப்படுகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது. 

எனவே திராவிட முன்னேற்றக் கழகம், இனியாவது பிரதமர் மோடி அவர்களின் முன்னேற்ற திட்டங்களை காப்பியடித்தோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டியோ "திராவிட மாடல்" என பொய் பிம்பம் உருவாக்காமல், மத்திய அரசின் திட்டங்கள் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். அதன் முதற்கட்டமாக, PM Internship மத்திய அரசின் திட்டம் என தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் ! அதுதான் தலைமைக்குரிய பண்பு என்பதை உணருங்கள் ஸ்டிக்கர் ஸ்டாலின் அவர்களே" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP Condemn to DMK MK Stalin and Sticker stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->