மு. க. ஸ்டாலின் யாருக்கான முதல்வர்..? - பாஜக தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர், " கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்ற மோகன்ராஜ், அப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதை கண்டறிந்து அழித்ததோடு, அதில் தொடர்புடைய பலரை கைது செய்தார். 

மேலும் மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவில் பணி செய்து கொண்டிருந்த 25 காவலர்களை ஒரே நாளில் இடமாற்றம் செய்து, கள்ளச் சாராயத்தை ஒழிப்பதில் உறுதியாக செயல்பட்டார்.

அப்படிப்பட்டவர் தனது பணி ஓய்வு காலத்திற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் கடந்த டிசம்பர் மாதமே ஏன் விருப்ப ஓய்வில் சென்றார்? அவரது விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் தான் காரணம் என்று தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள சம்பவத்தின் மூலம் அப்பட்டமாகத் தெரிகிறது. 

மோகன்ராஜை கள்ளக்குறிச்சி பகுதியில் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் திமுகவின் முக்கிய புள்ளிகள் சிலர் தான் மிரட்டி உள்ளதாக தெரிகிறது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா? அல்லது தன் கட்சியினருக்கான முதல்வரா? என்று தற்போது கேள்வி எழுகிறது.

உண்மையில் நமது முதல்வருக்கு பொது மக்கள் மீதும் , கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மீதும் அக்கறை இருந்தால், முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மோகன்ராஜை மிரட்டிய திமுக முக்கிய புள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது பதிவில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP Leader Annamalai Attacking TN CM M K Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->