தமிழகத்தில் கள்ளுக் கடைகள் திறக்கப் பட வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை..! - Seithipunal
Seithipunal



கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற 10 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிகழ்ச்சியின் முடிவில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, " கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் 50 க்கும் மேற்பட்ட மக்கள் கள்ளச் சாராயம் குடித்து பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. முழுக்க, முழுக்க வேதியியல் ரசாயனங்களைக் கொண்டு தான் இந்த சாராயங்கள் தயாரிக்கப் படுகின்றன.

கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழித்தாக வேண்டிய சூழலில் தான் நாம் இருக்கிறோம். தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் உறவினர்கள் ஆதரவுக்கு யாருமில்லாமல் நிராதரவாக நிற்கின்றனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் நாங்கள் அங்கு பண உதவி செய்து வருகிறோம்.

தற்போது தமிழகத்தில் கள்ளுக் கடைகளை அரசே திறந்தால் பூரண மது விலக்கு சாத்தியமாகும். கள்ளுக் கடைகளுக்கு அரசு தனியாக லைசென்ஸ் வழங்கி அதை விற்பதை முறைப்படுத்த வேண்டும். பீகாரில் பூரண மது விலக்கு சாத்தியமாகி உள்ளது. 

கேரளாவிலும் அதற்கான முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கள்ளுக் கடைகள் திறந்தால் தமிழகத்திலும் பூரண மது விலக்கு சாத்தியம் தான்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP Leader Annamalai Says Toddy Shops Should Be Open in TamilNadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->