வாங்குனது 0.02% ஓட்டு! ஆனா பாருங்க கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் பேசுவார்கள் - கம்னியூஸ்ட்டை கலாய்த்த பாஜக! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தலில் கம்னியூஸ்ட் காட்சிகள் வாங்கிய வாக்கு சாதிவித்தை சுட்டிக்காட்டி பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  "அடேங்கப்பா! இவ்ளோ ஓட்டா! மகாராஷ்டிராவில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 0.02% வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.35%  வாக்குகளையும் பெற்றுள்ளது. 

ஜார்கண்டில் இந்த இரு கட்சிகளும் தலா 0.20% வாக்குகளை பெற்றுள்ளது.

ஆனால் இன்று மாலை தமிழ் தொலைக்காட்சிகளில் பாருங்கள், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள் ஏதோ சாதித்து விட்டது போலவும், பாஜக வை விமர்சித்து கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் பேசுவார்கள். 

இப்படி, தங்கள்  கட்சி அழிந்து போவது குறித்து கவலைப்படாமல், மற்றவர்களின் அழிவை எதிர்நோக்கி கொண்டிருப்பதால் தான் அழிந்து கொண்டிருக்கிறார்கள்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தலில் தலை ஒரு தொகுதியில் கம்னியூஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP say about CPI and CPIM vote bank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->