பலே மகாராஷ்டிரா பலே! காங்கிரஸை கார்டூன் போட்டு கலாய்த்த தமிழக பாஜக! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி உறுதியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் வகையில் ஒரு கார்துணை பாஜக வெளியிட்டுள்ளது.

அதில், பாஜக வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்து செல்வதாகவும், காங்கிரஸ் பிரிவினை வாத அரசியல் செய்வதாகவும், அதனால் மகாராஷ்டிரா மக்கள் பாஜகவின் வளர்ச்சிக்கான அரசியலை தேர்ந்தெடுத்து உள்ளனர் என்பது போல சித்தரித்துள்ளது.

மேலும், அதன் பதிவில், "முகலாய ஆட்சிக்கு முடிவுரை எழுதிய மண்ணில், வரலாறு கண்டு வியக்கும் வீரர்களைப் பெற்ற மண்ணில், சரித்திரம் போற்றும் சத்ரபதி சிவாஜியினரின் சந்ததிகளைக் கொண்ட மண்ணில், இன்று பிரிவினைவாதிகளைப் பின்னுக்குத் தள்ளி தனது தொடர் வெற்றியைத் தக்க வைத்துள்ளார் மக்கள் தலைவர் நமது பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். 

மக்களைப் பிரித்தாள முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை என மக்கள் அரசியலை மிடுக்காக முன்னெடுத்துள்ளனர் மராட்டிய மக்கள். ஹரியானா ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து மராட்டிய மண்ணிலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியைத் தனதாக்கியுள்ளது பாஜக.

127 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடனும், 218 இடங்களில் தனது கூட்டணிக் கட்சிகளுடனும் முன்னிலை வகித்து வலிமையான வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நமது பாஜக-வின் இந்த வரலாறு காணாத வெற்றியானது, மக்கள் அரசியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்! மக்கள் ஒற்றுமையே, பாரதத்தின் வளர்ச்சி! வாழ்க பாரதம், வளர்க தேசியம்! என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP say about Maharashtra Election Result 2024 Congress rahulgandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->