மாணவனுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் : நேற்று, செஞ்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சாதிச் சான்றிதழ் கோரிய மாணவன் வாசன் மற்றும் மாணவி பூஜா ஆகியோருக்கு, இன்று பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஜூலை 8) திருவண்ணாமலை செல்லும் வழியில், செஞ்சியில் முருகன் என்பவரின் மகன் வாசன் மற்றும் மகள் பூஜா ஆகியோர் சந்தித்து, தங்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக பட்டியல் இன வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே, முதல்வர் தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கிட ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டு மனு அளித்தார்கள்.

அம்மனுவினை கருணை உள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர், உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்கள் வழங்கிட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருவண்ணாமலையில் அரசு விழாவினை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில் தமிழக முதல்வர் இன்று (ஜூலை 9) செஞ்சியில் மாணவன் வாசன் மற்றும் மாணவி பூஜா ஆகியோருக்கு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை வழங்கினார்".

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm issue to community certificate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->