மீண்டும் தனி ரயில்வே பட்ஜெட் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!
TN Congress Leader Emphasising Seperate Railway Budget
கடந்த 1924ம் ஆண்டு முதல் இந்தியாவில் ரயில்வே துறைக்கென்று தனி பட்ஜெட் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் 2016ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு ரயில்வே பட்ஜெட்டை ரத்து செய்தது. மேலும் பொது பட்ஜெட்டிலேயே ரயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைத்து தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "2016ம் ஆண்டு பாஜக அரசு, ரயில்வே துறைக்கான பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யும் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது.
ரயில்வே துறைக்கென்று தனி பட்ஜெட் இருந்தால் தான் அதிலுள்ள குறைகள் வெளியில் தெரியும். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு அவற்றையெல்லாம் மூடி மறைத்து வருகிறது. இதுதான் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறும் ரயில் விபத்துக்களுக்கு காரணம்.
எனவே பாஜக அரசு பழையபடி ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட்டைக் கொண்டு வர வேண்டும். மேலும் ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி, ரயில்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரயிலாக வந்தே பாரத் ரயில் தான் உள்ளது. இதனால் இந்த ரயிலில் பாதிக்கு மேல் இருக்கைகள் பதிவு செய்யப் படாமல் காலியாக தான் இந்த ரயில் பயணிக்கிறது. இது ஒரு தேவையில்லாத செலவு தான். இதற்கு பதிலாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TN Congress Leader Emphasising Seperate Railway Budget