நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாள் தமிழக அரசு சார்பில் மரியாதை.! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது.

அஇஅதிமுக கட்சி நிறுவனரும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர் எம்.ஜி ராமச்சந்திரன் அவர்களின் 105வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், எம்ஜிஆர் மாளிகையில் அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் உருவ சிலைக்கு நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn govt Honour to MGR birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->