டெல்லியை போல தமிழகத்திலும் மதுபான ஊழல்! சம்பவம் லோடிங் - அண்ணாமலை விடுத்த வார்னிங்!
TN Govt TASMAC Scam DMK MK Stalin BJP Annamalai
தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் மதுபானக் கொள்கையில் முறைகேடு செய்ததாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மதுபான ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த வழக்கின் கீழ், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் அவரது மகன் சைதன்யா பாகல் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் கடந்த திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில், தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை மற்றும் மதுக்கூட ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
குறிப்பாக சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சேர்த்து மொத்தம் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதன்போது, பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் மற்றும் கணினியில் இருந்த ஏராளமான தகவல்கள் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், டெல்லியை போல தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றிருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
English Summary
TN Govt TASMAC Scam DMK MK Stalin BJP Annamalai