தம்பி ரொம்ப சீன் போடாத.. கேள்வி கேட்ட பாஜக கிளை உறுப்பினருடன் மல்லுக்கட்டிய அமைச்சர் கீதா ஜீவன்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே வருவாய் ஆய்வாளருக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

அந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்ஙஅமைச்சர் கீதாஜீவன் ஆகிய இருவரும் கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர். திமுக எம்பி கனிமொழி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். 

அப்போது அங்கு வந்திருந்த விஜயகுமார் என்ற நபர், தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மனு அளித்தார்.மனுவைப் பெற்றுக் கொண்ட எம்பி கனிமொழி, விரைந்து தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் கிடைக்க வழி செய்வதாக உறுதியளித்தார்.

இருந்த போதிலும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், அந்த நபர்  தொடர்ந்து வவாக்யில்லாமல் வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து அவரை வெளியேற்றும் முயற்சியில் போலிசார் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் இருந்து நகராமல் அப்படியே இருந்த விஜயகுமாரை பார்த்து, “தம்பி ரொம்ப சீன் போடாதப்பா” என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜயகுமார் பாஜகவின் கிராம வார்டு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுப்பிய தொடர் சர்ச்சை கேள்விகளால் அப்பகுதி திமுகவில் தொண்டர்களுக்கும் விஜயகுமாருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN minister Geetha Jeevan has teased Bjp wardmember


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->