தமிழகத்தின் புதிய உள்துறைச் செயலாளராக தீரஜ் குமார் நியமனம் - யார் இவர்..!? - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் உள்துறைச் செயலாளராக இருந்த அமுதா மாற்றப்பட்டு, புதிய உள்துறைச் செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப் பட்டுள்ளார். 

சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் இங்கு நிலவும் சட்டம் - ஒழுங்கு குறித்த ஐயத்தை எழுப்பியுள்ளது. இதன் ஆரம்பப் புள்ளியாக கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய விஷ சாராய மரணங்கள் அமைந்தன. இதையடுத்து சேலம் அதிமுக பிரமுகர் படுகொலை, கடலூர் பாமக நிர்வாகி மீது கொலை முயற்சி, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்று தொடரும் வரிசையில் நேற்று மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியம் ஓட, ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து நாடாளுமன்றம் வரை கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக இருந்த அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு புதிய உள்துறைச் செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப் பட்டுள்ளார். 

பீகார் மாநிலம் பாட்னாவை பூர்வீகமாகக் கொண்டவர் தான்  இந்த தீரஜ் குமார். இவர் 1993ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை , உயர்கல்வித்துறை செயலாளராகவும், வணிகவரித்துறை செயலாளராகவும் தமிழக அரசின் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்துள்ள தீரஜ் குமார், தற்போது தமிழக அரசின் மிக முக்கியமான துறையான உள்துறைக்கு செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். 

உள்துறைச் செயலாளராக தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தீரஜ் குமார் நியமிக்கப் பட்டிருப்பது குறித்த முதலமைச்சர் ஸ்டாலினின் முடிவை தமிழக காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். உள்துறை என்பது தமிழக முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN New Home Secretary Dheeraj Kumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->