"தமிழ்நாடு".,க்கு காரணம் காமராஜர்.. அண்ணாவின் விருப்பம் "தமிழகம்".. ஆதாரம் பக்கம் எண்-100... உண்மையை போட்டு உடைத்த தமிழக பாஜக..!!
TNBJP said kamarajar is the reason named as Tamilnadu
தமிழகத்திற்கு மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழக முதலமைச்சராக அண்ணாதுரை இருந்த பொழுது ஜன.14ம் தேதி "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் "தமிழ்நாடு" என பெயர் மாற்றத்திற்கு காரணம் முன்னாள் முதல்வர் காமராஜர் தான் எனவும், கருணாநிதி அதை விரும்பவில்லை எனவும் தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் "காமராஜர் ஆட்சி காலத்தில் 24/12/1961 அன்று சட்டமன்றத்தில் சி.சுப்பிரமணியம் அவர்கள் இனி தமிழ்நாடு சட்டமன்றம் என்று அழைப்போம், தமிழ்நாடு அரசு என்று பேசுவோம் என்று மகிழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று சொன்னார். எங்கெல்லாம் மெட்ராஸ் மாகாணம் என்று உள்ளதோ அதையெல்லாம் தமிழ்நாடு என அழைக்கலாம்., ஆனால் அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல.
அதனால் சட்டம் இயற்ற தேவையில்லை என்றார் காமராஜர். ஆகவே தமிழ்நாடு என்று காமராஜர் அறிவித்த போதிலும் அதை சட்டமாக்கியது அண்ணா அவர்களின் ஆட்சியில் தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அண்ணா அவர்கள் விரும்பியது தமிழகம் என்ற பெயர்தான் என்பது 15/10/1980 அன்று பொன்னேரி அரசு கல்லூரி விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"அப்பொழுது இருந்த அமைச்சர் பெருமக்களை பார்த்து நான் கேட்டபோதெல்லாம் சொன்னார்கள் தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே! அந்தப் பெயர் இலக்கியத்திலே இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு. இலக்கியத்திலே இல்லாத ஒரு பெயரை வைக்க சொல்கிறாயே நியாயம் தானா? என்று கூட கேட்டார்கள். நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன் "இமில் கடல் வரைப்பில் தமிழகம்" என்று சிலப்பதிகாரத்திலே இருக்கிறது.
ஒருவேளை சிலப்பதிகாரத்தை நீங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளவில்லையா?" என்று நான் சட்டமன்றத்தில் கேட்டிருக்கிறேன். ஆனால், நிறைவேறவில்லை. அண்ணா அவர்கள் தான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற உடன் சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்கிற பெயரை உருவாக்கி இருந்த பெயரை அறிமுகப்படுத்தி தமிழகம் என்று பெயரிடலாமா? என்று சர்ச்சை எழுந்த பொழுது டெல்லியிலே இருந்தவர்கள் தமிழகம் என்று சொன்னால் எங்களால் சொல்ல அவ்வளவு சுலபமாக இருக்காது.
எனவே தமிழ்நாடு என்று இருக்கட்டும் என்று அவர்கள் கேட்டுக் கொள்ள அதற்கேற்ப, பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்கின்ற பெயரை நம்முடைய மாநிலத்திற்கு சூட்டுகிற நிகழ்ச்சியை கோலாகலமாகக் கொண்டாடி சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்". (ஆதாரம் : கருணாநிதி அவர்கள் எழுதியுள்ள பாரதி பதிப்பகத்தின், ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா! புத்தகத்தில்(பக்கம் எண் -100)
மேலும், 1972ம் ஆண்டு, மே 6ம் நாள், சென்னையில் இளங்கோவடிகள் விழாவில் கருணாநிதி அவர்கள், 'தமிழகம்' என்று இந்த மண்ணுக்குப் பெயர் சூட்ட சங்கரலிங்கனார் ஏறத்தாழ 70 நாட்கள் உண்ணாவிரதமிருந்து செத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைக்க சங்கரலிங்கனார் செத்ததை எடுத்துச் சொன்னோம். இலக்கியத்தில் இருக்கிறதா? என்று கேட்டார்கள். தமிழ் கடல்வரைப்பில் தமிழகம் என்று சிலப்பதிகாரத்தில் இருக்கிறதே என்று சொன்னோம். (மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று புத்தகத்தில், 144வது பக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்.)
அதாவது அண்ணா அவர்கள் விரும்பியது தமிழகம் என்ற பெயராக இருந்தாலும், டெல்லியிலே இருந்தவர்கள் விரும்பிய காரணத்தினாலே தான் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட ஒப்புக்கொண்டார் என்று திரு.கருணாநிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நம்மை பொறுத்தவரை தமிழகம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்று தான்.ஆனால், தமிழகம் என்பதை தான் அண்ணா அவர்கள் விரும்பியுள்ளார் என்பதை ஆதாரபூர்வமாக கருணாநிதி அவர்கள் குறிப்பிட்ட அதே கருத்தை ஆளுநர் அவர்கள் 'தமிழ்நாடு என்பதை விட தமிழகம்' என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டதற்கு , இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கி எழுவது ஏன்?
அன்றைய திமுக தலைவரின் கருத்தை தானே ஆளுநர் பிரதிபலித்திருக்கிறார். அதை மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பது ஏன்? அண்ணாவின் விருப்பத்தை மு.க.ஸ்டாலின் அவர்கள் வெறுப்பது ஏன்? டெல்லியில் இருப்பவர்களுக்காக இன்னும் தன் நிலையை மாற்றி கொள்ள திமுக மறுப்பது ஏன்? என பதிவிட்டுள்ளார். மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட காரணம் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தான் என திராவிட கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில் அதற்கு காரணம் காமராஜர் தான் என தமிழக பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
English Summary
TNBJP said kamarajar is the reason named as Tamilnadu