#BREAKING || பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சியை கைப்பற்றிய கட்சி எது தெரியுமா.?! இதோ முடிவு.!
TNElectionResult 2022 thirichendur
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியை திமுக தற்போது கைப்பற்றியுள்ளது. திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள இருபத்தி ஏழு இடங்களில், 17 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் திருச்செந்தூர் நகராட்சியை திமுக தற்போது கைப்பற்றியுள்ளது.
அரசியல் கட்சிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சியை தற்போது திமுக கைப்பற்றியுள்ளது.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி திமுக தற்போது கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 15 இடங்களில், 12 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 3 வார்டுகளில் காங்கிரஸ், பாஜக, அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 15 இடங்களில், பத்து இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 5 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் 4 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
நெல்லை சங்கர் நகர் பேரூராட்சி திமுக வசமாகியுள்ளது. சங்கர் நகர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக -11 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக ஒரு இடத்தில கூட வெற்றிபெறவில்லை. அதே சமயத்தில் அமமுக - 1 வார்டில் வெற்றிபெற்று வசதியுள்ளது.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் மொத்த அரசியல் கட்சியையும் வாஷ்-அவுட் செய்து, மொத்தமுள்ள 15 இடங்களிலும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
English Summary
TNElectionResult 2022 thirichendur