பொன்முடி குற்றவாளியா.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு.!! ஆளுநர் ரவிக்கு புதிய சிக்கல்.!!
TNGovt case filed against GovernorRavi regards ponmudi otta
சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனையை மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
மேலும் ஒரு மாத காலத்திற்குள் பொன்முடி இந்த வழக்கில் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் உச்ச நதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி செயல்படுவார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்த நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
முதலமைச்சரின் இந்த கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள தமிழக ஆளுநர் ரவி உச்சநீதிமன்றம் தண்டனையை தான் நிறுத்தி வைத்துள்ளது குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம்.
ஆனால் அவர் நிர்பராதி என தீர்ப்பளிக்கவில்லை. மேலும் அவர் மீதான குற்றச்சாட்டு தற்போது நிலுவையில் தான் உள்ளது. எனவே பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க இயலாது என மறுத்து பதில் கடிதம் அனுப்பி இருந்தார்.
இதனிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மேல் திருப்பதி மேற்கோள் காட்டி இந்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளதால் கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
TNGovt case filed against GovernorRavi regards ponmudi otta