பரபரப்பான 5ம் கட்ட மக்களவை தேர்தல்..இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு!!
Today 6 clock election propaganda finish
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டம் வாக்குப் பதிவும் மே 13ஆம் தேதி நான்காம் கட்ட மக்களவை தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தநிலையில், 5ம் கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி தீவிர மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.
5ம்கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.5ம் மக்களவை தேர்தலில் 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்குவங்கத்தில் 7,ஒடிசா மற்றும் பீகாரில் தலா 5,ஜார்கண்டில் 3, காஸ்மீர் மற்றும் லடாக்கில் தலா 1 என 49 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குபதிவு நடைபெற உள்ளது.
English Summary
Today 6 clock election propaganda finish