நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தீவிரம் காட்டும் அரசியல் காட்சிகள்.. அதிமுகவின் முதல் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என்று பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணியை தொடங்கி உள்ளன.

அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, அ.தி.மு.க. சார்பில் கடந்த 22-ந்தேதி தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசார குழு, தேர்தல் விளம்பர குழு உள்ளிட்டவற்றை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதில், தொகுதி பங்கீட்டு குழுவில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பென்ஜமின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட 10 பேர் இடம் உள்ளனர். தேர்தல் பிரச்சாரக்குழு, விளம்பரக்குழுவிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 குழுக்களின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில், வருகிற நாடாளு மன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், வேட்பாளர்கள் தேர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்தும் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today admk election comitee meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->