மாநிலங்களவை தேர்தல்.. இன்று திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்.!!
Today DMK Rajya Sabha Candidates nomination
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை எம்பி பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் காலியாகும் 52 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் 4 இடங்களில் உள்ளது. அதில் திமுக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், ரமேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனையும், துணை தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை துணை செயலாளர் ரமேஷையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ரமேஷ் ஆகிய ஆகியோரிடம் வேட்புமனுக்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
English Summary
Today DMK Rajya Sabha Candidates nomination