நாடே எதிர்பார்த்த கர்நாடகா சட்டசபைத் தேர்தல் - இன்று வாக்குப்பதிவு ஆரம்பம்.!
today karnataga assembly election 2023 start
நாடே எதிர்பார்த்த கர்நாடகா சட்டசபைத் தேர்தல் - இன்று வாக்குப்பதிவு ஆரம்பம்.!
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.
இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் 224 பேர், காங்கிரஸ் சார்பில் 223 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 209 பேர், இதைத்தவிர ஆம் ஆத்மி, ஸ்டிபிஐ, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தம் 5,31,33,054 பேர் வாக்களிக்கின்றனர். அதற்காக 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கி, மாலை 6:00 மணி வரை முடிவடைய உள்ளது.
கர்நாடகத்தில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்திலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் தீவிரமாக உள்ளனர். இதற்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 13 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
today karnataga assembly election 2023 start