பசும்பொன்னில் நாளை தேவர் ஜெயந்தி!...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை புறப்படுகிறார்! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தெய்வீகத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை நடைபெறுகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் பங்கேற்க உள்ளார். இதற்காக  முதலமைச்சர் விமானம் மூலம் இன்று இரவு 7 மணிக்கு மதுரைக்கு செல்கிறார்.  முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை மாநகர், மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளைடிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் தெய்வீக  திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தமிழ்நாட்டில் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராக போற்றப்படும் இவர், சமூக சீர்திருத்தவாதி, அனைவருக்குமான அரசியல் தலைவராக திகழ்ந்தார்.

தமிழ்நாட்டில் சமூக அரசியலில் பெரும்  மாற்றத்தை ஏற்படுத்தியதோடு தனது வாழ்நாள் முழுவதும் ஜாதி, மத வேறுபாடுகளை களைத்து அனைவரும் சமம் என்ற சமூக நீதி கொள்கையை பரப்பி வந்தார்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளை  கொண்ட தெய்வீக  திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை ஆண்டு தோறும் அக்டோபர் 30-ம் தேதி அரசு விழாவாக  கொண்டாடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow is devar jayanti in pasumpon prime minister mk stalin is leaving for madurai today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->