ஓபிசி க்கு துரோகம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் அரசு.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal



நடந்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, இன்று பராசத்தில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அந்த பேரணியில் பேசிய மோடி, " திரிணாமுல் காங்கிரஸ் அரசு வாக்கு ஜிகாத் நடத்துகிறது.

இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காக இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை திரிணாமுல் காங்கிரஸ் பறித்து வருகிறது. மேலும் அந்த கட்சி இங்கு சமரச அரசியல் செய்ய விரும்புகிறது. இதன்மூலம் மேற்கு வங்காளத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இவர்கள் துரோகம் செய்துவிட்டனர்.

இந்த துரோகத்தை தற்போது நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் செய்யும் துரோகத்தையும், பொய்களையும், தவறுகளையும் வெளிப்படுத்துபவர்களை திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்காது. எனவே தான் அக்கட்சியினர் நீதிமன்ற உத்தரவை எதிர்க்கின்றனர்.

நீதித்துறையையே எதிர்க்கும் அளவிற்கு இவர்களுக்கு தைரியத்தை கொடுத்தது யார்? இவர்களுக்கு நம் நீதித்துறையின் மீதும் அரசியலமைப்பு மீதும் நம்பிக்கையே இல்லை. அதனால் தான் இதுவரை எங்கும் இல்லாத அளவு நீதிபதிகளையே அவர்கள் தாக்கி வருகின்றனர்" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trinamul Congress Betrayed OBC PM Modi Speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->