திரிணாமுல் காங்கிரஸ் எம். பி. மஹுவா மொய்த்ராவின் வைரல் பதிவு..!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்ததையடுத்து, தொடர்ந்து 3 ஆவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. இதையடுத்து நேற்று நாடாளுமன்றத்தின் முதல் மக்களவை கூட்டத் தொடர் தொடங்கியது.

இந்தக் கூட்டத் தொடரில் நேற்றும், இன்றும் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து நாளை புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம். பி. மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலே ஆகியோர் 2019ம் ஆண்டு எம். பி. யாக பதவியேற்ற போது எடுத்த புகைப்படத்தையும், அவர்கள் அனைவரும் தற்போது 2024ம் ஆண்டு மீண்டும் எம். பி. யாக பதவி ஏற்றுள்ள புகைப்படத்தையும் தனது பதிவில் பகிர்ந்துள்ளார். 

மேலும் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படத்தில் புதிதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் இடம் பெற்றுள்ளார். மேலும் தனது பதிவில், "மக்களவையில் மீண்டும் ஒன்று கூடிய போர் வீரர்கள்.. 2019 Vs 2024.." என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம். பி. யான மஹுவா மொய்த்ராவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே  இவரது பதிவில் இடம் பெற்றுள்ள பெண்கள் அனைவரும் இந்தியா கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trinamul Congress M P Mahua Moitras Viral Tweet


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->