நமே மாறுவோம் கமல்ஹாசன்., போற்றி வணங்கிடுவோம் டிடிவி தினகரன்.!  - Seithipunal
Seithipunal


உலகிற்கு அகிம்சை எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை தந்த காந்தியடிகளின் நினைவு நாளான இன்று, அரசியல் கட்சி தலைவர்கள், அவரின் நினைவை போற்றி வருகின்றனர்.

அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"அகிம்சை எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகிற்குத் தந்த அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள் இன்று! ஒவ்வோர் இந்தியரும் ஒற்றுமையோடு வாழ்ந்திட இரத்தம் சிந்திய நம் தேசத்தந்தையின் நினைவைப் போற்றி வணங்கிடுவோம்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்." என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV AND KAMAL SAY ABOUT GANDHI JEYANTI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->