சுயாட்சி, கூட்டாட்சி என வாய் கிழிய பேசி, அதிகாரிகளின் மூலம் ஆட்சி நடத்த நினைப்பது ஏன்? திமுகவுக்கு டிடிவி தினகரன் கேள்வி.! - Seithipunal
Seithipunal


கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலத்தை ஆட்சிக்கு வந்தவுடன் குறைத்த திமுக அரசு, தற்போது அவர்களின் அதிகாரத்தையும் பறித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலத்தை ஆட்சிக்கு வந்தவுடன் குறைத்த திமுக அரசு, தற்போது அவர்களின் அதிகாரத்தையும் பறித்திருப்பது கண்டனத்திற்குரியது. 

சுயாட்சி, கூட்டாட்சி என வாய் கிழிய பேசி, ஜனநாயகத்தின் காவலர்கள் போல தங்களை காட்டிக்கொள்ளும் திமுக, கூட்டுறவு சங்கத்  தலைவர்களை வெறும் பொம்மையாக வைத்துக்கொண்டு அதிகாரிகளின் மூலம் ஆட்சி நடத்த நினைப்பது ஏன்? 

கூட்டுறவு என்கிற சித்தாந்தத்தின் மீது இவர்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமானால்,  காசோலைகளில் கையெழுத்திடும் கூட்டுறவு சங்கத்  தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தை  திரும்பப் பெற வேண்டும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About DMK Govt March


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->