வாவ்!!!மோகன்லாலின் 'எல் 2 எம்புரான்' ட்ரைலரைக் கண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்...! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'லூசிஃபர்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக  வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் 2 ம் பாகம் உருவாகியுள்ளது.

மேலும் லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இது ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார்.நடிகர் பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. பான் இந்திய படமாக இப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கான டிரெய்லர் இன்று ஐந்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.இதில்  கிட்டத்தட்ட 3.50 நிமிடம் ஓடும் இந்த ட்ரெய்லரில் மோகன்லால் எப்படிப்பட்டவர் என்பதையும், முதல்வராகப் பொறுப்பேற்ற டோவினோ தாமஸின் அரசியலையும் இந்த பாகம் பேசும் எனத் தெரிகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக  ஈர்த்துள்ளது.

நடிகர்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்:

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி அவரது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "அன்புள்ள மோகன்லால் நடித்து பிருத்விராஜ் இயக்கிய திரைப்படமான 'எம்புரான்' படத்தின் டிரெய்லரை பார்த்தேன். மிக அற்புதமான வேலை . படக்குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கடவுளிம் ஆசிர்வாதங்களுடன்" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth congratulates Mohanlal on seeing the trailer of L2 Empuraan movie


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->