சூப்பர்! 'ஷைன் டாம் சாக்கோ' முக்கிய கதாபாத்திரமாக 'குட் பேட் அக்லி' யில்...!
Shine Tom Chako as the main character in Good Bad Ugly movie
'குட் பேட் அக்லி' நடிகர் தல அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம். இப்படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகவுள்ளது.
மேலும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில், இந்த படத்தில் மலையாள நடிகர் 'ஷைன் டாம் சாக்கோ' முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் மலையாள சினிமாவில் துணை வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.மேலும் தமிழில், விஜய்யுடன் "பீஸ்ட்" படத்தில்அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியை கேட்ட ரசிகர்கள் அஜித்துடன் இணைந்து நடிக்கும் காட்சிகளைக்காண ஆவலுடன் இருக்கின்றனர்.
English Summary
Shine Tom Chako as the main character in Good Bad Ugly movie