செம!!!அடுத்த அப்டேட் க்கு தயாரா!!! சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தின் அடுத்த பாடல்...!
The next song kanimaa from Suriyas Retro movie
பிரபல நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ'.இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும் இதில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். மேலும் 'ரெட்ரோ' படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ரெட்ரோ படத்தின் 2 வது பாடல் நாளை (மார்ச் 21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இதற்கு முன்னதாக இந்தப் படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாளை ஒட்டி, இந்தப் படத்தின் பி.டி.எஸ். வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.அது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
English Summary
The next song kanimaa from Suriyas Retro movie