காரைக்குடி ரௌடி ஓட ஓட விரட்டிப் படுகொலை! பீதியில் மக்கள்! தமிழக சட்டம் ஒழுங்கின் நிலை? பாஜக கேள்வி!
BJP Narayanan Condemn to DMK MKStalin Govt
காவல்துறையினரை டாஸ்மாக் கடைகளின் முன்னே பாதுகாப்புக்கு நிறுத்தினால், ரௌடியிஸத்தை எப்படி கட்டுப்படுத்த முடியும்? என்று, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் படுகொலைகளின் தொடர்ச்சியாக காரைக்குடியில் இன்று காலை மனோ என்ற ரௌடி ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழக சட்டம் ஒழுங்கின் நிலையை தோலுரித்து காட்டுகிறது.
படுகொலை செய்யப்பட்டிருப்பது ரௌடி தான் என்றாலும், பட்டப்பகலில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது.
பாஜகவினர், முதலமைச்சரின் படத்தை டாஸ்மாக் கடைகளில் ஒட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில் காவல் துறையை டாஸ்மாக் கடைகளின் முன்னே பாதுகாப்புக்கு நிறுத்தினால், ரௌடியிஸத்தை எப்படி கட்டுப்படுத்த முடியும்? குற்றங்களை எப்படி தடுக்க முடியும்? சட்ட ஒழுங்கு சீர்கேட்டை எப்படி சீர் செய்ய முடியும்?
தொடர்கதையாகி வரும் படுகொலைகள் அரசு நிர்வாகத்தின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Condemn to DMK MKStalin Govt