ஆதாரம் கிடைச்சுடுச்சு - கிடுக்குப்புடி கேள்வியுடன் டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal


கரூரில் சாலை போடாமலேயே தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்துள்ளதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், "கரூரில் சாலை போடாமலேயே தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வெளியாகியிருக்கும் புதிய ஆதாரங்கள் குறித்து, முதலமைச்சர் திரு.ஸ்டாலினும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்களா?

இந்த முறைகேட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள், இது ஒரு கூட்டுக் கொள்ளையோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கே 100 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது தி.மு.க ஆட்சியில் எந்த அளவிற்கு ஊழல் மலிந்து போயிருக்கிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது.

‘சர்க்காரியா புகழ்’ தி.மு.க.வினர் கரூரில் சாலை போடாமலேயே மக்கள் பணத்தை  சுரண்டியதைப் போல இன்னும் என்னென்ன திருவிளையாடல்களை அரங்கேற்றுகிறார்களோ?! என்று, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran say About karur Road Scam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->