இப்படியே விட்டா எப்படி? மாச கணக்கு ஆகிடுச்சு., மத்திய அரசின் கதவை தட்டும் டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயிலில் மூத்தக்குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை கடந்த 2020 மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி மீண்டும் ரயில்கள் ஓடத்தொடங்கிய நிலையில் இந்த கட்டணச்சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரயிலில் மூத்தக்குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மூத்தக்குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்டுவந்த கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட இந்த கட்டணச்சலுகை,  இயல்பு நிலை திரும்பி மீண்டும் ரயில்கள் ஓடத்தொடங்கி மாதக்கணக்கில் ஆனபிறகும் மூத்தக்குடிமக்களுக்கு திரும்ப அளிக்கப்படாதது சரியானதல்ல.

மூத்தக்குடிமக்களை செல்வமாக கொண்டாடும் நாடுதான் நன்றி மிகுந்தவர்கள் இருக்கிற தேசமாக திகழ முடியும். முதியோர்களுக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் வருமான கிடைக்கிறது என்று நினைக்காமல், அவர்களுக்குரிய சலுகையை உடனடியாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்."

இவ்வாறு அதில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran say about train ticket issue may


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->