பெரும் அதிர்ச்சியளிக்கிறது., முழுமையான விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதில் தொடர்புடைய அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதில் தொடர்புடைய அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததலிருந்து ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகள் அதிகரித்து வரும் நிலையில், மறுபக்கம் மகளிருக்கு பாதுகாப்பில்லாத வகையில் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது. 

அதிலும் ஆளுங்கட்சியினர் இதில் தொடர்புடையவர்களாக இருப்பதால் விசாரணையில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது. வேறு யாராவது இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். 

விருதுநகர் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய மற்றவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV dhinakaran say about viruthunagar incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->